×

தேவகோட்டையில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேவகோட்டை, ஜூன் 8: தேவகோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் ஆசிப் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் சித்திக், மாவட்ட துணை செயலாளர்கள் தீன், ஹனிபா, ஹாரிஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் வருசை முகமது, மாவட்ட வர்த்தகரணி செயலாளர் முகமது முன்னிலை வகித்தனர்.

மாநில பொருளாளர் காஞ்சி.இப்ராஹிம் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீன கடைசி எல்லை ரபாவில் குண்டு மழை பொழிந்து அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும் கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து கோஷமிட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

The post தேவகோட்டையில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Israel ,Devagottai ,Devakottai ,Tamil Nadu Tawheed Jamaat Sivagangai district ,District Vice President Asif ,District Secretary ,Abdul Siddiqui ,District Deputy Secretaries ,Deen ,Haniba ,Harris ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த...