×

மாணவர்களின் விவரங்களை எமிஸ்-ல் பதிவிட வேண்டும்

நெல்லை, ஜூன் 8: பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களின் விவரங்களை எமிஸ்-ல் பதிவிட வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதலவர்களுக்கு நெல்லை மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் முத்துச்சாமி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள், நாளை மறுதினம் (10ம் தேதி) திறக்கப்பட உள்ளது. பள்ளி திறக்கும் அன்றைய தினம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் வகுப்பறை, வளாகம், குடிநீர் தொட்டிகளை சுத்தமான முறையில் வைக்கப்பட்டு உள்ளதா? என்பதையும், பள்ளியில் மின்சார வடம் பாதுகாப்பாக அமைக்கப்பட்டு உள்ளதா? என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி திறக்கும் முதல் நாளே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுக்கள் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்குதல், பெற்றோரின் கைப்பேசி எண்ணை எமிஸ் தளத்தில் பதிவு செய்தல் போன்ற பணிகளையும் பள்ளி திறந்த முதல் நாளே செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post மாணவர்களின் விவரங்களை எமிஸ்-ல் பதிவிட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai District ,Principal Education Officer ,Muthuchami ,Dinakaran ,
× RELATED குலதெய்வ கோயிலுக்கு சென்ற மதுரையை சேர்ந்தவர் பலி