×

அனுமதியின்றி எருதாட்ட விழா ; 3 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, ஜூன் 8: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பாலம்மா நகரில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல், எருதாட்டம் நடத்தியதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, எருது விடும் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த, அதே பகுதியை சேர்ந்த சந்திரன் உள்பட 3பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அனுமதியின்றி எருதாட்ட விழா ; 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bull-fighting ceremony ,Krishnagiri ,Parkur Balamma town ,Krishnagiri district ,Barkur police ,Ox-fighting ceremony ,
× RELATED உழவர் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு