×

காயங்களுடன்கிடந்தவர் சாவு

தர்மபுரி, ஜூன் 8: தர்மபுரி ரயில் நிலையத்தில் 1வது பிளாட்பாரத்தின் தெற்கு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடலில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதை பார்த்த ரயில் நிலைய ஊழியர்கள், அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தர்மபுரி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிளாட்பாரம் பகுதியில் சுற்றித்திரிந்த போது கீழே விழுந்து காயமடைந்து இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரிய வரவில்லை. அவரது கையில் பர்வீன் என்று ஆங்கில எழுத்துக்களில் பச்சை குத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து தர்மபுரி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காயங்களுடன்கிடந்தவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,station ,Dharmapuri Government Hospital ,Dinakaran ,
× RELATED மூதாட்டி திடீர் சாவு