×

நிலம் வாங்கி தருவதாக பணம் மோசடி

மதுரை. ஜூன் 8: நிலம் வாங்கி தருவதாக, பணம் பெற்று மோசடி செய்தவர் மீது, நீதிமன்ற உத்தரவுப்படி அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை, தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் ஜெயமங்கலம்(63). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த கண்ணன், சென்னையில் ஒரு பிளாட் வாங்கினால் மற்றொரு பிளாட் இலவசம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய ஜெயமங்கலம், ரூ.1.64 லட்சத்தை கண்ணனிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய கண்ணன், நிலத்தையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக ஜெயமங்கலம் மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் உத்தரவுப்படி கண்ணன் மீது அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

The post நிலம் வாங்கி தருவதாக பணம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Anna Nagar police ,Jayamangalam ,Madurai, ,Tahsildar ,Namakkal district ,Dinakaran ,
× RELATED மல்லிகையில் மகசூல் பெறும் வழிகள்