×

ஆரவாரமில்லாமல் உழைத்தவர் எம்பி அகங்காரத்தோடு செயல்பட்டவர் படுதோல்வி: ‘காமெடி பீசான அண்ணாமலை’ என வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சென்னை: கர்நாடகாவில் உயர் பதவியிலிருந்த இரண்டு தமிழர்கள் ஒரே நேரத்தில் பதவி விலகி நேரடி அரசியலுக்கு வந்தார்கள். இதில் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், கே.அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாகவும் பணியாற்றியவர்கள். ஒரு கட்டத்தில் தற்செயலாக அதே மாவட்டத்தில் இருவரும் 2019ல் தானாக முன்வந்து சேவையை விட்டு வெளியேறினர். பாஜ தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் அண்ணாமலை 2018ல் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை தொடர்ந்து ஓய்வு பெற்றார். மென்மையான பேச்சாளர் சசிகாந்த் செந்தில் காங்கிரசை மீண்டும் கட்டி எழுப்ப திரைக்குப் பின்னால் உழைத்தார்.

அதே நேரத்தில் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையோ நாகரிக அரசியலை முன்னெடுக்காமல், நாகரிகமில்லா அரசியலை முன்னெடுத்தார். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவது, நா கூசாமல் பொய்களை தொடர்ந்து கூறுவது, அரசியல் தலைவர்களை மோசமான வார்த்தைகளால் பேசுவது உள்ளிட்ட அவரது ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் இறங்கினார். மத்தியில் பாஜ ஆட்சி செல்வாக்குமிக்கதாக இருந்ததால், அவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது.
காவல் துறையினரை வழிநடத்துவது போன்றே பாஜவினரையும் நடக்க வற்புறுத்திய அவரது நடவடிக்கையால் உட்கட்சிக்குள் கோஷ்டி பூசல் வெடித்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் இருவருக்குமான வித்தியாசத்தை உணர்த்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் வந்த பதிவு வைரலாகி வருகிறது.

அந்த பதிவில், ‘‘ஒருவர் இந்துத்துவாவுக்கு ஆதரவாகவும் மற்றொருவர் இந்துத்துவாவுக்கு எதிராகவும் ராஜினாமா செய்தார்கள். ஒருவர் ஆரவாரமில்லாமல், தன்னடக்கத்தோடு பாடுபட்டு தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இன்னொருவர் ஆர்ப்பாட்டத்தோடும், தான் என்கிற அகங்காரத்தோடும் தன் கட்சிக்காரர்களையே மதிக்காமல் காமெடி பீஸ் ஆகி மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வியுற்றார். ஒருவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். மற்றொருவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை’ என்ற தகவலுடன் அந்த பதிவு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

The post ஆரவாரமில்லாமல் உழைத்தவர் எம்பி அகங்காரத்தோடு செயல்பட்டவர் படுதோல்வி: ‘காமெடி பீசான அண்ணாமலை’ என வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Karnataka ,Sasikanth Senthil ,K. Annamalai ,
× RELATED தமிழகத்திலேயே அதிக வாக்கு...