×

பாஜவுக்கு ஆதரவாக வேலை செய்த அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை: எடப்பாடி அதிரடி முடிவு; சேலத்தில் இன்று முக்கிய ஆலோசனை

சேலம்: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியடைந்தது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்த வேண்டும் என கூறி வருகின்றனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் முகாமிட்ட எடப்பாடி பழனிசாமியை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மாஜி அமைச்சர்கள் நேரில் சந்தித்து தோல்விக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்தனர்.
ஓரிரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

அதிமுகவுக்கு எதிராகவும் பாஜகவுக்கு ஆதரவாகவும் வேலை செய்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை பெருந்துறை புறப்பட்டு சென்றார். அங்கு பேத்தியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு மீண்டும் சேலம் திரும்பினார். இன்று காலை 10 மணிக்கு சேலம் மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

The post பாஜவுக்கு ஆதரவாக வேலை செய்த அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை: எடப்பாடி அதிரடி முடிவு; சேலத்தில் இன்று முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Edappadi ,Salem ,Tamil Nadu ,Puducherry ,Sasikala ,OPS ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்