×

சிவன் கோயில் சுவரில் வெடிகுண்டு வீச்சு

புதுச்சேரி: புதுச்சேரியில் சிவன் கோயில் மதில் சுவரில் வெடிகுண்டு வீசி வெடிக்க செய்த சம்பவம் தொடர்பாக பாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு புறம் கஞ்சா, மறுபுறம் வெடிகுண்டு கலாச்சாரம் என குற்றச்சம்பங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் பாகூரில் பழமை வாய்ந்த மூலநாதர் சிவன் கோயிலின் பின்புறம் உள்ள மதில் சுவரில் ஒரு கும்பல், வெடிகுண்டு வீசி வெடிக்க செய்தது. இதனை அவர்களே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் ஒரு வாலிபர் வெடிகுண்டை கோயில் மதில் சுவர் மீது வீசி வெடிக்க செய்துவிட்டு மகிழ்ச்சியாக திரும்பி செல்வதும், அதனை அங்கிருந்த மற்றவர்கள் பார்த்து பாராட்டுவது போல் வீடியோ பதிவில் இருந்தது. அதனை ஒருவர் எடிட் செய்து, அந்த வெடிகுண்டு வீசும் கும்பலுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ஜெயில் வார்டன் ஒருவர் துணையாக இருப்பதாகவும், அதனால், போலீசார் அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோயில் மீது வெடிகுண்டு வீசிய வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்த வீடியோ அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பாகூர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சிவன் கோயில் சுவரில் வெடிகுண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Sivan Temple ,Puducherry ,Bhagur ,Shivan-temple ,Dinakaran ,
× RELATED துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி...