×

மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதம்!

சென்னை: மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதமாகியுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் தாமதமாக வந்ததால் சிறிது நேரம் வாகனங்கள் தாமதமாக பால் பண்ணையை விட்டு வெளியேறின. பால் விநியோக வாகனத்தை தொடர்ந்து கண்காணித்து அனைத்து சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் விநியோகம் செய்யப்பட்டது. பால் தாமதம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எந்தவித புகாரும் பெறப்படவில்லை என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

The post மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதம்! appeared first on Dinakaran.

Tags : Madhavaram dairy farm ,CHENNAI ,Madhavaram ,dairy ,farm ,
× RELATED மாதவரம் பால் பண்ணையில் மொத்த...