- இந்தியா
- சந்திரபாபு நாயுடு
- மோடி
- தில்லி
- நரேந்திர மோடி
- இன் நாடாளுமன்றக் குழு
- தேசிய ஜனநாயக கூட்டணி
- அமித் ஷா
- ராஜ்நாத் சிங்
- நாடாளுமன்ற என்டிஏ குழு
- பாஜக
டெல்லி : பழைய நாடாளுமன்றத்தில் நடந்த புதிய எம்பிக்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.நாடாளுமன்ற என்டிஏ குழுத் தலைவராக பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங் முன்மொழிய அமித் ஷா வழிமொழிந்தார். பாஜக தேசியத் தலைவர் நட்டா, மூத்த தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்டோரும் மோடி பெயரை வழிமொழிந்தனர். மோடியின் பெயர் முன்மொழியப்பட்டபோது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மோடி, மோடி என முழக்கமிட்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா,”தேசத்தின் சேவைக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளார் மோடி. முதன் முறையாக ஒடிசாவில் பாஜக தனது அரசை அமைக்க போகிறது. அருணாச்சலில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க போகிறது. 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் தேசம் வலிமையான மற்றும் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறி உள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு முன்னேற்ற பாதையில் செல்வதோடு, கிராமங்களும் ஏழைகளும் வலிமை பெற்று வருகின்றனர். பட்டியலினத்தவர்கள் முன்னேறி செல்வதற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது,”என்றார்.
தொடர்ந்து என்டிஏ தலைவராக மோடியை தேர்வு செய்ய ஆதரித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “கடந்த 3 மாதங்களாக பிரதமர் மோடி ஓய்வின்றி இரவு பகலாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மோடி, அமித்ஷாவின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. மோடி அரசின் நடவடிக்கையால் உலகின் மிகப்பெரிய அதிகாரம் மிக்க மையமாக இந்தியா மாறி உள்ளது. இந்தியாவை 3வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாக்கப் போகிறார் மோடி. தேச நலன் மற்றும் மாநிலங்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவை சமன்படுத்தப்பட வேண்டும். இந்தியா இன்று சரியான நேரத்தில் சரியான தலைவரை பெற்றிருக்கிறது. இந்தியா மட்டும் தான் கடந்த 10 ஆண்டுகளில் மிகச் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது,”இவ்வாறுத் தெரிவித்தார்.
The post உலகின் சக்திவாய்ந்த தலைவர்.. இந்தியா இன்று சரியான நேரத்தில் சரியான தலைவரை பெற்றிருக்கிறது : மோடியை புகழ்ந்த சந்திரபாபு நாயுடு!! appeared first on Dinakaran.