×

இன்ஸ்டாகிராம் நண்பர் யார்? குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

 

விருதுநகர், ஜூன் 7: விருதுநகர் அருகே, தனது தாயிடம் குழந்தை இருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராம் நண்பருடன் மாயமான இளம்பெண் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் விஎம்சி காலனியை சேர்ந்தவர் சங்கரபாண்டி, இவரின் மகள் முருகேஸ்வரி (28), இவருக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும், கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, குழந்தையுடன் விருதுநகர் வந்த முருகேஸ்வரி தாயாருடன் வசித்து வந்தார். வீட்டுவேலை செய்து வந்த முருகேஸ்வரி, நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமல்போனது.

இதனால் முருகேஸ்வரியை செல்போனில் தொடர்பு கொண்ட குடும்பத்தினர் முயன்றனர். அப்போது அவர் தனது போனை வீட்டில் வைத்து சென்றிருப்பது தெரியவந்தது. அந்த போனை சோதனை செய்தபோது, அதில் இன்ஸ்டகிராம் மூலம் நவீன் என்ற நபருடன் அவர் பழகி வந்திருப்பது உறுதியானது. குழந்தையின் நலன் கருதி முருகேஸ்வரியை கண்டுபிடித்து தரும்படி விருதுநகர் மேற்கு போலீசில் தாய் பட்டம்மாள் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை தவிக்கவிட்டு மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

The post இன்ஸ்டாகிராம் நண்பர் யார்? குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Instagram ,Virudhunagar ,Shankarabandi ,Virudhunagar VMC Colony ,Murugeswari ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராம் மூலம் பணம்...