×

தூத்துக்குடியில் முதியவரிடம் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி, ஜூன் 20: தூத்துக்குடியில் முதியவரை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் தூத்துக்குடி ராமர்விளையை சேர்ந்த ஷேக்ஆதாம் மகன் மெகபூப்ஜான்(26), தூத்துக்குடி சத்திரம் தெருவை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் கண்ணன்(29) என்பதும், அவர்கள் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவரிடம் பணம் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து மெஹபூப்ஜான், கண்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் மெஹபூப்ஜான் மீது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தூத்துக்குடியில் முதியவரிடம் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Tuthukudi ,Inspector ,Aleksraj ,Madhya Pradesh ,Mundinam ,Thutukudi Depakulam ,
× RELATED தூத்துக்குடியில் பிரபல வணிக...