×

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை

 

நத்தம், ஜூன் 7: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் நிலபர் (22). இவருக்கும், தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்த மதன்குமாருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நிலபர் கணவரோடு கோபித்து கொண்டு நத்தம் கோவில்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்ட நிலபர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் நத்தம் எஸ்ஐ விஜயபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Tags : RTO ,Natham ,Balakrishnan ,Nilabar ,Natham Kovilpatti, Dindigul district ,Madankumar ,Periyakulam Vadakarai ,Theni district ,
× RELATED நத்தத்தில் மளிகை கடை கதவை உடைத்து ரூ.1.75 லட்சம் திருட்டு