×

திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 236 மாணவ-மாணவிகள் தேர்ச்சி

 

திருப்பூர், ஜூன் 7: நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 236 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மருத்துவத்துறை இளநிலை படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5 ம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் 5 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் 2250 மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.

கடந்த மே 30 ம் தேதி நீட் தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியானது. இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையில் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்த தேர்வு முடிவுகளின் படி ஊதியூர் சாந்தி நிகேதன் பள்ளி மாணவன் சஞ்சய் 687 மதிப்பெண் பெற்று அரசு உதவி பெறும் பள்ளி பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

பழனியம்மாள் பள்ளி மாணவி ரூபா ஸ்ரீ 441 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். பலமுறை தேர்வெழுதும் மாணவர்களில் கணபதிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பவானி 650 மதிப்பெண்கள் பிடித்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 236 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

The post திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 236 மாணவ-மாணவிகள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirupur district ,Tirupur ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் ரோட்டோரத்தில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்