×

கோயில்களில் அமாவாசை வழிபாடு

 

ராமநாதபுரம், ஜூன் 7: ராமநாதபுரம் மாவட்ட அம்மன் கோயில்களில் வைகாசி மாத அமாவாசையை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. உத்தரகோசமங்கை வராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை அபிஷேகம் செய்யப்பட்டு, மஞ்சள் காப்பு சாற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று வரை நூற்றுக்கணக்கான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

கடலாடி அருகே வனப்பேச்சியம்மன், ராக்காச்சி அம்மனுக்கு பால், மஞ்சள், விபூதி, தீர்த்தங்கள், குங்குமம் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதுபோன்று ராமநாதபுரம் அரண்மனையிலுள்ள ராஜராஜேஸ்வரி அம்மன், பெரியமாரியம்மன், வனசங்கரி அம்மன், ரயில்நிலைய பாலம் அருகே உள்ள வெட்காளியம்மன், கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன், பாதாள காளியம்மன், ஆப்பனூர் அரியநாயகி அம்மன், பூங்குளம் சேதுமாகாளியம்மன், காணீக்கூர் பாதாள காளியம்மன் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அம்மனுக்கு இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்களும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. மேலும் அமாவாசையையொட்டி திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில், மாரியூர் பூவேந்தியநாதர் கோயில்களில் முன்னோர்களுக்கு பக்தர்கள் மோட்ச தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.

The post கோயில்களில் அமாவாசை வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,District Goddess Temples ,Vaikasi month ,Uttarakhosamangai ,Varahi Amman ,
× RELATED போக்சோ வழக்கில் ஆஜராகாத தாம்பரம்...