×

குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு-பரபரப்பு

 

அவிநாசி, ஜூன் 7: அவிநாசி அருகே சேவூர் குலாலர் வீதியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்தனர். அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சி குலாலர் வீதியில் குழந்தைவேல் என்பவரது வீட்டிற்குள் பாம்பு புகுந்தது.  இதையறிந்த அப்பகுதி மக்கள் அவிநாசி தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி வீட்டிற்குள் இருந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். வீட்டிற்குள் புகுந்த பாம்பை உடனடியாக பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றுள்ளனர். அவிநாசிதீயணைப்புத் துறையினரை சேவூர் கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.

The post குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு-பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Sewur Kulalar Road ,Avinashi Union ,Kulalar Road ,Saveur Panchayat ,Dinakaran ,
× RELATED அவினாசி ரோடு மேம்பாலம் பணி; கோவை எம்.பி. நேரில் ஆய்வு