×

கலிக்கநாயக்கன்பாளையத்தில் ஜூன் 12ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்: மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

 

கோவை, ஜூன் 7: கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை பேரூர் வட்டம் கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் மணிமஹால் மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.  கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி இம்முகாமிற்கு தலைமை தாங்குகிறார். இந்த முகாம் தொடர்பாக இன்று (7ம் தேதி) காலை 11 மணிக்கு கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் கலிக்கநாயக்கன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார்கள்.

எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுக்கலாம். அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் விசாரணை மேற்கொண்டு வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள மக்கள் தொடர்வு முகாமில் பயனாளிகளுக்கு கலெக்டர் கிராந்திகுமார் பாடி நலத்திட்ட உதவிகளை வழங்குவார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கலிக்கநாயக்கன்பாளையத்தில் ஜூன் 12ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்: மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Public Relations Camp ,Kalikanayakanpalayam ,Coimbatore ,Coimbatore district administration ,Manimahal Mandapam ,Coimbatore district ,District ,Collector ,Krantikumar ,Relations ,Camp ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்