×

ரயில் பாதைகளை பராமரிக்க உத்தரவு

கோவை, ஜூன் 18: சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் பாதைகளை பராமரிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ரயில் பாதைகளில் தண்டவாளங்களின் ஸ்திர தன்ைம, கிளாம்புகள் சரியாக இருக்கிறதா?, பழுது இருக்கிறதா?, இரு ரயில் பாதை சந்திப்பு இடங்களில் கற்கள், மண் குவிந்து கிடக்கிறதா? என பார்க்கவேண்டும். டிராக் மெயின்டன்ஸ் பணிகள் முறையாக நடக்க வேண்டும். கோவை, போத்தனூர், வடகோவை ரயில் நிலையங்கள், பிளாட்பாரம், ரயில்கள் நிறுத்துமிடங்கள் நல்ல முறையில் இருக்க வேண்டும். சிக்னல்களை அதிகாரிகள் சரியாக பராமரிக்க வேண்டும். ரயில் பாதையில் எதாவது பாதிப்பு, பாதுகாப்பு குறைபாடு இருந்தால் உடனடியாக கோட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ரயில் பாதையோரம் முட்புதர், செடிகள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ரயில் பாதைகளை பராமரிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Salem ,Dinakaran ,
× RELATED குமாரபாளையத்தில் பரபரப்பு சம்பவம் ...