×

மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ்-2 துணை தேர்வுக்கு 4 மையங்கள் அமைப்பு

 

ஈரோடு, ஜூன் 7: ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் -1 மற்றும் பிளஸ் -2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணை தேர்வுக்கு 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு,பிளஸ் -1, பிளஸ் -2 வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வராதவர்களுக்கு துணை தேர்வானது நடைபெற உள்ளது.

அதன்படி, பிளஸ் -2க்கு வருகிற 24ம் தேதி முதல் ஜூலை மாதம் 1ம் தேதி வரையும், பிளஸ் 1க்கு வருகிற ஜூலை 2ம் தேதி முதல் ஜூலை 9ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கு வருகிற ஜூலை 2ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை துணை தேர்வுகள் நடக்க உள்ளது. இத்தேர்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தி ஆகிய இடங்களில் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, துணை தேர்வு நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

The post மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ்-2 துணை தேர்வுக்கு 4 மையங்கள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED அரசு பஸ்சில் இருந்து முதியவரை தாக்கி...