×

புகையிலை பதுக்கி விற்ற வாலிபர் கைது

 

ஈரோடு, ஜூன்7: பெருந்துறை- குன்னத்தூர் சாலையில் ஒரு பேன்சி ஸ்டோர் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர். இதில், கடையில் 13 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, கடையின் ஊழியரான விற்பனையாளர் ஜிஜேந்திர சிங் (28) என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான கடையின் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வாக்சிங் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post புகையிலை பதுக்கி விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Perundurai-Kunnathur road ,Perundurai police ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற 3 பேர் கைது