×

திருத்துறைப்பூண்டியில் கஜசம்ஹாரமூர்த்திக்கு அமாவாசை அபிஷேகம்

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 7: திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோயிலில் (பெரிய கோயில்) கஜசம்ஹாரமூர்த்திக்கு சாமிக்கு நேற்று அமாவாசையை முன்னிட்டு யாகத்தோடு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். கஜசம்ஹாரமூர்த்திக்கு அமாவாசை நாட்களில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைவதுடன் வாழ்க்கையில் முன்னேற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தமிழ்நாட்டில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் மட்டுமே ஒரே கல்லிலால் ஆன கஜசம்ஹாரமூர்த்தி சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உழவாரப்பணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post திருத்துறைப்பூண்டியில் கஜசம்ஹாரமூர்த்திக்கு அமாவாசை அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Amavasai ,Thiruthurapoondi ,Gajasamharamurthy ,Sami ,Biravimarundeeswarar Temple ,Big Temple ,Amavasi ,
× RELATED மேல்மலையனூருக்கு இன்று 100 சிறப்பு...