×

40 தொகுதியிலும் வெற்றி இந்தியா கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

 

முத்துப்பேட்டை, ஜூன் 7: முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இடங்களும் இந்தியாவில் அதிக இடங்களும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் திமுக மாவட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடி த்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் அறுமுக சிவக்குமார், விசிக மாவட்ட செயலாளர் வெற்றி, காங்கிரஸ் நகர தலைவர் எம்.சி.சதிஷ் குமார், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மார்க்ஸ், மார்க்சிஸ்ட் நகர செயலாளர் செல்லத்துரை, தமுமுக நகர துணைத்தலைவர் மன்சூர் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியிகளின் நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துக்கொண்டனர்.

The post 40 தொகுதியிலும் வெற்றி இந்தியா கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : India ,Muthuppet ,Tamil Nadu ,Pondicherry ,Muthupet ,All India Party ,DMK ,Deputy Secretary ,MS Karthik ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...