×

தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

 

காரைக்கால், ஜூன் 7: காரைக்காலில் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித குளறுபடிகளும் இல்லாமல் நடைபெற்று முடிந்தது. மேலும் மாவட்ட காவல்துறை மூலம் தேர்தல் பாதுகாப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனிடையே பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் நேரில் அழைத்து பாராட்டி சிறப்பான பணிக்கான சான்றிதழை வழங்கினார்.

The post தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,2024 parliamentary elections ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை!!