×

செக் குடியரசில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி

பிராக்: செக் குடியரசு நாட்டில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்தனர். இது குறித்து உள்துறை அமைச்சர் விட் ரகுசான் கூறுகையில்,‘‘பார்டுபைஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு, பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

பயணிகள் ரயில் தனியார் நிறுவனமான ரெஜியோ ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமானது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். போக்குவரத்து துறை அமைச்சர் மார்டின் குப்கா கூறுகையில், ‘‘பராக் மற்றும் நாட்டின் கிழக்கு பகுதியை இணைக்கும் பிரதான வழித்தடம் மூடப்பட்டுள்ளது” என்றார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

The post செக் குடியரசில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Czech Republic ,Prague ,Interior Minister ,Vit Ragusan ,Pardubice ,
× RELATED செக் குடியரசு நாட்டில் சரக்கு ரயிலும்,...