×

காசா பள்ளி மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 39 பேர் பலி

தெயிர் அல்-பலா: கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 6 மாதங்களை கடந்தும் நீடிக்கிறது. இந்த போரில் 30,000க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டனர். காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் வௌியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி மத்திய காசாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பள்ளியில் தங்கியிருந்த 39 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து இஸ்ரேல், “அந்த பள்ளியில் ஹமாஸ் அமைப்பினர் தங்கியிருந்தனர். அதனாலேயே தாக்குதல் நடத்தப்பட்டது” என விளக்கம் அளித்துள்ளது.

The post காசா பள்ளி மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 39 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gaza school ,Teir ,Israel ,Hamas ,Palestinians ,Gaza ,
× RELATED காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு...