×

மக்களவையில் காங்கிரஸ் பலம் 100 ஆனது

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் சாங்லி தொகுதியில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான வசந்த தாதா பாட்டீலின் பேரனும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவருமான விஷால் பாட்டீல் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றியும் பெற்றார். இந்நிலையில் இவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர் ந்து நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரசுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதையடுத்து மக்களவையில் காங்கிரசின் பலம் 100 ஆனது.

The post மக்களவையில் காங்கிரஸ் பலம் 100 ஆனது appeared first on Dinakaran.

Tags : Congress ,Lok ,Sabha ,New Delhi ,Vishal Patil ,Maharashtra ,Chief Minister ,Vasant Dada Patil ,Congress Party ,Sangli ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை காங். நிர்வாகிகள் நியமனம்