×

ஆட்சி அமைப்பதற்கு முன்பே ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அராஜகம்: ஜெகன்மோகன் கண்டனம்

திருமலை: ஆந்திர மாநில காபந்து முதல்வர் ஜெகன்மோகன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் நடத்தும் தாக்குதல்களால் மிகவும் பயங்கரமான அசாதரமான சூழல் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்பே தெலுங்கு தேசம் கட்சியினர் அராஜகத்தில் களமிறங்கி உள்ளனர். அரசு கிராமச் செயலகங்கள், ரைத்து போரோசா மையம் போன்ற அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் பல இடங்களில் சேதப்படுத்தப்படுகிறது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்பின்றி உள்ளனர். ஆளுங்கட்சியினரின் அழுத்தங்களால் காவல் துறை மந்தமாகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக வலுவாக இருந்த சட்டம் ஒழுங்கும் அமைதியும் பாதுகாப்பும் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. கவர்னர் உடனடியாக தலையிட்டு அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். தெலுங்கு தேசம் கட்சி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் சமூக ஊடகத்தினருக்கும் நாங்கள் துணை நிற்கிறோம் என ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பதிவு செய்துள்ளார்.

The post ஆட்சி அமைப்பதற்கு முன்பே ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அராஜகம்: ஜெகன்மோகன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Telugu Desam Party ,Jaganmohan ,Tirumala ,Andhra Pradesh ,Chief Minister ,
× RELATED தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தால்...