×

முன்விரோதத்தில் தாக்கிய வாலிபர் கைது

அம்பை,ஜூன் 7: கல்லிடைக்குறிச்சியில் தொழிலாளியை முன்விரோதத்தில் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கல்லிடைக்குறிச்சி மடவிளாகம் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (36). தொழிலாளியான இவருக்கும் அதே பகுதி வலுவக்குடி தெருவைச் சேர்ந்த இசக்கி ராமகிருஷ்ணன் (18) என்பவருக்கும் இடையே கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 4ம் தேதி சிவபெருமாள் வலுவக்குடி தெருவில் உள்ள சர்ச் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கி ராமகிருஷ்ணன் அவரை அவதூறாக பேசியது மட்டுமின்றி தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கல்லிடைக்குறிச்சி எஸ்ஐ இசக்கி, தாக்குதல் நடத்திய ராமகிருஷ்ணனை கைது செய்தார்.

The post முன்விரோதத்தில் தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Ambai ,Kallidaikurichi ,Sivaperumal ,Kallidaikurichi Madavilagam Street ,Isaki Ramakrishnan ,Valuvakudi Street ,
× RELATED அஞ்சல் துறை சார்பில் அம்பை பள்ளியில் கிராம சபை கூட்டம்