×

பைக்கில் தவறிவிழுந்து விவசாயி பரிதாப பலி

பாவூர்சத்திரம்,ஜூன் 7: பாவூர்சத்திரம் அருகே பைக்கில் தவறி விழுந்து விவசாயி பலியானார். பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முத்துவேல் ராஜா (39). விவசாயியான இவர் நேற்று வீட்டில் இருந்து கடைக்கு கீழப்பாவூர் மைதானம் காமராஜர் சிலை அருகில் செல்லும் போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பைக்கில் தவறிவிழுந்து விவசாயி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Bhavoorchatram ,Ramakrishnan ,Muthuvel Raja ,Keezhappavur Pilliyar Kovil Street ,Geezappavur ,Maidan Kamaraj ,
× RELATED பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும்