×

கலைஞர் பிறந்த நாள் விழா

ராஜாக்கமங்கலம், ஜூன் 7 : கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய திமுகவினர் ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன் தலைமையில் ராஜாக்கமங்கலம், ஆலங்கோட்டை, கன்னக்குறிச்சி நடுவூர், காக்கா தோப்பு, ரைஸ் மில் ஜங்ஷன் உட்பட ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் அங்கையற் கண்ணன், மாவட்ட கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் மூர்த்தி, தொமுச கண்ணன், வழக்கறிஞர் அணி சகாய டெல்வர், ஊராட்சி தலைவர்கள் கண்ணன், செந்தில்குமார் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் சசிகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் டேனியல், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் அணி முருகேசன், பேரூர் செயலாளர் பிரபா எழில், ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி டானியல் ரஞ்சன் மற்றும் நேசபால், பிலிப், செல்லத்துரை, ராஜேஷ் ரெத்தின மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Rajakamangalam ,Rajakamangalam North Union DMK Union ,Sarkuru Kannan ,Alangottai ,Kannakurichi ,Madhuvur ,Kaka Thoppu ,Rice Mill Junction ,
× RELATED 8வது நாளாக கடலில் இறங்க தடை; கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் வெறிச்சோடியது