×

இரணியல் ரயில் நிலைய சாலையில் வாலிபர் மர்மச்சாவு

திங்கள்சந்தை, ஜூன் 7: இரணியல் ரயில் நிலையம் செல்லும் சாலையில் வாலிபர் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரணியல் அருகே அழகியமண்டபம் – திங்கள்நகர் சாலையில் இருந்து இரணியல் ரயில் நிலையம் செல்லும் சாலையில் பரம்பை பிள்ளையார்கோயில் உள்ளது. இந்த கோயில் அருகில் ஆலமரத்தடியில் கடந்த 3ம் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார். அவர் வெள்ளை நிற சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அந்த நபர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதை அடுத்து அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆத்திவிளை விஏஓ சுரேஷ் பாபு இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர் யார்..? எப்படி இறந்தார்..? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரணியல் ரயில் நிலையம் செல்லும் சாலையில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இரணியல் ரயில் நிலைய சாலையில் வாலிபர் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Walibar Marmachau ,Iranial Railway Station Road ,Iranial railway station ,Ajjayamandapam ,Iranial ,Dingalnagar road… ,marmachau ,Dinakaran ,
× RELATED பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர் திரளாக பங்கேற்பு