×

காங்கிரஸ் எம்பிக்களுடன் செல்வப்பெருந்தகை இன்று டெல்லி பயணம்

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் முன்னிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். இதில், வெற்றி பெற்ற எம்பிக்கள் சசிகாந்த் செந்தில், விஜய் வசந்த், கோபிநாத், விஷ்ணு பிரசாத், ராபர்ட் புரூஸ், ஜோதிமணி, வக்கீல் சுதா ந்து கொண்டனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்பிக்களுடன் இன்று டெல்லி செல்கிறார்.

The post காங்கிரஸ் எம்பிக்களுடன் செல்வப்பெருந்தகை இன்று டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Tags : Selvaperundagai ,Delhi ,Congress ,Chennai ,Satyamurthy Bhawan ,Tamil Nadu ,President ,Selvaperunthagai ,Assembly Congress ,Rajesh Kumar ,Rahul Gandhi ,Congress party ,
× RELATED பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி...