×

காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மக்களவைத் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு..!!

டெல்லி: காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மக்களவைத் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக அமர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டத்தில் இது தொடர்பான கருத்துக்களை முன் வைத்து அதன் பின்னர் முடிவுகள் எடுக்க உள்ளது.

வெற்றி பெற்ற எம்பிக்கள் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னர் அதிகாரபூர்வமான எம்பிக்கள் கூட்டம் நடைபெறும். அதில், எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற தேர்வானது செய்யப்பட கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஒரு புறம் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக அமர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

மற்றொரு புறம் காங்கிரஸ் தலைமை அமைப்பினுடைய வெற்றி வேட்பாளரான எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிஷோரினால் சர்மாவையும் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அமர வைக்கலாமா என்ற கோணத்தில் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகார பூர்வமான ஆலோசனைக்கு பின்னரே எந்த ஒரு முடிவுகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராகுல் காந்திக்கு அதிக பட்ச ஆதரவு என்பது எழுந்துள்ளது.

 

The post காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மக்களவைத் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Lok Sabha ,Congress ,Delhi ,Speaker ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களின்...