×

வேளாண் துறையை 3 கட்சிகள் கேட்பதால் பாஜகவுக்கு நெருக்கடி


டெல்லி: வேளாண் துறை அமைச்சர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என பாஜகவுக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி நிபந்தனை விதித்துள்ளார். 2 எம்.பி.க்களை மட்டுமே கொண்ட மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு ஒன்றிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் துறையை ஏற்கனவே தெலுங்குதேசம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் தங்களுக்கு வழங்க வலியுறுத்தி வருகின்றன. வேளாண் துறையை 3 கட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

The post வேளாண் துறையை 3 கட்சிகள் கேட்பதால் பாஜகவுக்கு நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : Delhi ,BJP ,Kumarasamy ,2 ,M. B. ,EU ,Dinakaran ,
× RELATED பாஜக ஆட்சியின் தவறான கொள்கையால் ராணுவ...