- பி.ஏ.
- உத்திரப்பிரதேசம்
- ஜே. க. பகஜன்
- லக்னோ
- ஜே. க.
- பகுஜன்
- சமாஜ்
- பாஜக
- பிஎஸ்பி
- பகுஜன் சமாஜ்
- பாகஜன்
- தின மலர்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 16 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு பகுஜன் சமாஜ் காரணமாக அமைந்தது. பாஜக வென்ற 14 தொகுதிகள், கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற 2 தொகுதியில் பெற்ற வித்தியாசத்தை விட பிஎஸ்பி வாக்குகள் அதிகம். பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால் உத்தரப்பிரதேசத்தில் மேலும் 16 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி தோற்றிருக்கும். அக்பர்பூரில் பகுஜன் சமாஜ் 73,140 வாக்குகள் பெற்றதால் பா.ஜ.க.வை விட 44,345 வாக்குகள் குறைவாக பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
15,647 வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க.விடம் சமாஜ்வாதி கட்சி தோற்ற அலிகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி 1,23,929 வாக்குகள் பெற்றுள்ளது. 28,670 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்த அம்ரோகா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி 1,64,099 வாக்குகள் பெற்றுள்ளது. பதோகி தொகுதியில் திரிணாமுல் காங்கிரசும் பரூகாபாத் தொகுதியில் காங்கிரசும் தோல்வியடைய பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகளை பிரித்ததே காரணம். பிஎஸ்பி வாக்கை பிரித்ததால் பதேபூர் சிக்ரி, கர்தோய், மீரட், மீர்சாபூர், மிஸ்ரிக், ஃபூல்பூர், ஷாஜகான்பூர், உன்னாவ் தொகுதிகளில் சமாஜ்வாதி தோல்வி அடைந்தது.
பி.எஸ்.பி. வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு 19 இடங்களே கிடைத்திருக்கும். உ.பி.யில் பா.ஜ.க.வின் பலம் குறைந்திருந்தால் அதன் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 226-ஆகவும் தேஜ கூட்டணி பலம் 278-ஆகவும் குறைந்திருக்கும். பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால் இந்தியா கூட்டணிக்கு 248 இடங்கள் கிடைத்திருக்கும். பிரகாஷ் அம்பேத்கர் கட்சி வாக்கை பிரித்ததால் அகோலாவில் காங்., புல்தானா, ஹக்கனங்கலே, மும்பை வடமேற்கில் உத்தவ் சிவசேனை வெற்றியை இழந்தன. பிரகாஷ் அம்பேத்கர் கட்சி வாக்கை பிரிக்காமல் இருந்திருந்தால் இந்தியா கூட்டணிக்கு 252 இடங்கள் கிடைத்திருக்கும்.
The post உத்தரப்பிரதேசத்தில் 16 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கு உதவிய பகுஜன் வாக்குகள் appeared first on Dinakaran.