×

வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது

நெல்லை,ஜூன்6: கங்கைகொண்டான் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கம்பியால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் வடகரை மேலதெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி(30). வடகரை அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் வெயிலுமுத்து(54). இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை இசக்கிபாண்டி வடகரை ரேஷன் கடை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த வெயிலுமுத்து உள்பட இருவர் சேர்ந்து இசக்கிபாண்டியை வழிமறித்து அவதூறாக பேசி இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து இசக்கிபாண்டி கங்கைகொண்டான் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்ஐ சுதன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வெயிலுமுத்துவை கைது செய்தார்.

The post வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Gangaikondan ,Isakipandi ,Vadakarai Meleteru, Gangaikondan, Nellai district ,Veilumuthu ,Vadakarai Amman Sannathi Street ,Dinakaran ,
× RELATED குலதெய்வ கோயிலுக்கு சென்ற மதுரையை சேர்ந்தவர் பலி