×

திருத்துறைப்பூண்டியில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து நாகை எம்பி மரியாதை

திருத்துறைப்பூண்டி, ஜூன் 6: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாகை தொகுதியில் இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜ் 4,65,044 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை தோற்கடித்து, 2,08,957 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே பிஎஸ்ஆர் நினைவு மண்டபத்தில் சீனிவாசராவ் உருவ படத்திற்கு வை.செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, உலகநாதன், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், திமுக நகர செயலாளர் ஆர். எஸ்.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் நாகராஜன், மதிமுக மாவட்ட பொருளாளர் கோவி சேகர் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் மேள தாளம் முழங்க நகர பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, இமானுவேல் சேகரனார் சிலை, காமராஜர் சிலை, அண்ணா சிலை, அம்பேத்கர் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

The post திருத்துறைப்பூண்டியில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து நாகை எம்பி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Nagai ,Thirutharapoondi ,Tiruthurapoondi ,Y. Selvaraj ,Communist Party of India ,AIADMK ,Surjit Shankar ,Dinakaran ,
× RELATED நாகை மருத்துவமனை முன்பு நடந்த போராட்டம் வாபஸ்..!!