×

பேராவூரணி பேரூராட்சியில்

பேராவூரணி , ஜூன் 6: பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ராஜா தலைமையில் ,பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகம் தொடங்கி அண்ணா சிலை வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தொடர்ந்து பேராவூரணி பெரியகுளக்கரை, நீலகண்ட பிள்ளையார் ஆலய தெப்பக்குளம், நவீன எரிவாயு தகனமேடை வளாகம், பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, எரிவாயு தகனமேடை வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில், வர்த்தக சங்க தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் சாதிக் அலி, பேரூராட்சி கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரமணி, சிவசுப்பிரமணியன், மகளிர் சுய உதவிக் குழுவினர், டெங்கு பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பேராவூரணி பேரூராட்சியில் appeared first on Dinakaran.

Tags : Beravoorani Municipality ,Peravoorani ,World Environment Day ,Peravoorani District Municipality ,
× RELATED அன்னவாசல் பெண்கள் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி