×

பொன்னமராவதி சிவன் கோயிலில் வைகாசி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி, ஜூன் 6: பொன்னமராவதி சிவன் கோயில் வைகாசி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொன்னமராவதி ஆவுடை நாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகன் வள்ளி தெய்வானைக்கு சித்திரை மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை செய்து வழிபாடு நடைபெற்றது.முன்னதாக கோயில் முன்பு சிறப்பு வேள்வி நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் விழாக்குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதே போல பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

The post பொன்னமராவதி சிவன் கோயிலில் வைகாசி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Vaikasi Month Kartika ,Ponnamaravathi Shiva Temple ,Ponnamaravati ,Ponnamaravati Shiva Temple ,Kartika ,Murugan Valli Deivanai ,Nayaki Sametha ,Rajaraja Choisewarar ,Vaikasi ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதியில் வர்த்தகர்கள் இன்று...