×

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ஜெயங்கொண்டம், ஜூன் 6: ஜெயங்கொண்டத்தில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் சிவசங்கர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில், கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அண்ணா சிலை, கலைஞர் கருணாநிதி உருவ படத்திற்கு, ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில், திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில், அரியலூர் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இவ்விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் கணேசன் மற்றும் மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Minister ,Sivashankar ,Ariyalur District, Jayangkondam City DMK ,Anna ,Karunanidhi ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட...