×

பள்ளி முன்பு பான்மசாலா விற்பனை

பள்ளிபாளையம், ஜூன் 6: பள்ளிபாளையம் அடுத்துள்ள ஐந்துபனை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி முன்புள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து பள்ளிபாளையம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரங்கநாதன் போலீசாரோடு சோதனை செய்தார். இதில் ராமு என்பவரின் பெட்டிக்கடையில் பான்மசாலா, குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை அதிகாரிகள் கைப்பற்றி கடைக்கு சீல் வைத்தனர். கடை உரிமையாளருக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆவாரங்காடு செல்வம் பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ பான்மசாலா கைப்பற்றப்பட்டது. இந்த கடையின் உரிமத்தை ரத்து செய்து சீல் வைக்க மாவட்ட உணவுத்துறை அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், குமாரபாளையம் தம்மண்ண செட்டியார் வீதியில் உள்ள சுப்புலட்சுமி மளிகை கடை, ஓலப்பாளையம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அங்கமுத்து மளிகை கடை, பல்லக்காபாளையம் ராஜம்மாள் மளிகை கடைகளில் சோதனை செய்யப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடைகளில் பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்யும்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் உத்தரவிட்டார். இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ₹25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

The post பள்ளி முன்பு பான்மசாலா விற்பனை appeared first on Dinakaran.

Tags : Panmasala ,Pallipalayam ,Bitumpanai ,Ranganathan ,Food Safety Officer ,Dinakaran ,
× RELATED பள்ளிபாளையம் மாணவி பங்கேற்பு