×

மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, ஜூன் 16: திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடந்ததை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எலச்சிபாளையத்தில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ேநற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ரமேஷ், சத்திவேல், பாலகிருஷ்ணன், கந்தன் மற்றும் மோட்டார் சங்க பொருளாளர் சத்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ma. Communist ,Trichengode ,Marxist Communist Party ,Tirunelveli ,Western Union ,Venkatasalam ,Communist ,Dinakaran ,
× RELATED சாதி மறுப்பு திருமணம் செய்து...