×

பள்ளிபாளையம் மாணவி பங்கேற்பு

பள்ளிபாளையம், ஜூன் 15: பள்ளிபாளையம் பெரியார் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேன்மொழி. இவர் திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில், 63 கிலோ எடை பிரிவில் பங்கேற்று 412.5 கிலோ எடையை தூக்கி, முதலிடம் பிடித்தார். இதையடுத்து பஞ்சாபில் 16ம்தேதி நடைபெறும் தேசிய வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் செல்லும் மாணவி தேன்மொழியை, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் உதவிகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், திமுக நகர நிர்வாகிகள் ரவீந்திரன், பிரபு, பார்த்திபன், சித்துராஜ், பாலாஜி, ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

The post பள்ளிபாளையம் மாணவி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Thenmozhi ,Pallipalayam Periyar ,Tiruchengode ,Dinakaran ,
× RELATED பள்ளிபாளையத்தில் கையகப்படுத்தப்பட்ட...