×

அருப்புக்கோட்டையில் மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் துவக்கம்

அருப்புக்கோட்டை, ஜூன் 6: அருப்புக்கோட்டையில், மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பிஷேகம் ஜூன் 9ம் தேதி காலை நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி, சொக்கநாதர் கோயிலின் கும்பாபிஷேகம் 2007ம் ஆண்டு நடந்தது. இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோயிலின் மகா கும்பாபிசேஷகம் ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கியது.

இதில் கணபதி ஹோமம், தனபூஜை, நவக்ரஹ ஹோமம், தீபலட்சுமி பூஜை உள்ளிட்டவற்றை தொடர்ந்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் விஜயக்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், நகர்மன்ற துணை தலைவர் பழனிச்சாமி, நகர திமுக செயலாளர் ஏ.கே.மணி, கோயில் செயல் அலுவலர் தேவி மற்றும் கும்பாபிஷேக நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பன்னிரு திருமுறைமன்றம், பக்தர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.

The post அருப்புக்கோட்டையில் மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Meenakshi Temple ,Kumbabhishekam ,Arupukottai ,Yagasala Pujas ,Meenakshi Chokkanath ,Temple ,Kumbishekam ,Meenakshi ,Sokkanathar Temple ,Charity Department ,Aruppukkottai Chokkalingapuram ,Aruppukkottai ,
× RELATED செய்யாறு, ஆரணி அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா