×

டெல்லி பயணம் ஒரே விமானத்தில் நிதிஷ், தேஜஸ்வி

பாட்னா: டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் பாட்னாவில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். அதே விமானத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்வதற்காக பயணித்தார். இரு தலைவர்களும் விமானத்தில் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். முதலில் நிதிஷ் குமாரின் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த தேஜஸ்வி, பின்னர் அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து பயணித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post டெல்லி பயணம் ஒரே விமானத்தில் நிதிஷ், தேஜஸ்வி appeared first on Dinakaran.

Tags : Nitish ,Tejashwi ,Delhi ,Patna ,Bihar ,Chief Minister ,United Janata Dal ,Nitish Kumar ,RJD ,Deputy Chief Minister ,India alliance ,
× RELATED ஒரே விமானத்தில் டெல்லி செல்லும் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்..!!