×

பாஜவின் பி டீம் கட்சிகளின் கதி

புதுடெல்லி: ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர்.காங்கிரஸ் தோல்வி குறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். அவர் தன் ட்விட்டர் பதிவில், “நாடாளுமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜவின் பி டீமாக இருந்த பிஜூ ஜனதா தளம், ஒவ்வொரு விஷயத்திலும் மோடியை ஆதரித்தது. இதேபோல் பாஜவின் மற்றொரு பி டீமாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பாஜவின் ஒவ்வொரு விஷயத்தையும் ஆதரித்தது. இப்போது பிஜேடியும், ஒய்எஸ்ஆர்சிபியும் அழிந்துவிட்டன. பாஜவுடன் இருக்கும் மாநில கட்சிகளுக்கு இதுதான் நடக்கும்” என்று விமர்சித்துள்ளார்.

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்
மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்:
* மும்பை வடமேற்கு தொகுதியில் ரவீந்திர தத்தாராம் வைக்கர்(சிவசேனா) 48 வாக்குகள்
* கேரள மாநிலம் அட்டிங்கல் தொகுதியில் அடூர் பிரகாஷ்(காங்கிரஸ் ) 684 வாக்குகள்
* ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் ராவ் ராஜேந்திர சிங்(பாஜ) 1,615 வாக்குகள்
* சட்டீஸ்கரின் கங்கர் தொகுதியில் பிரோஜ்ராஜ் நாக் (பாஜ) 1884 வாக்குகள்.
* சண்டிகர் தொகுதியில் மணிஷ் திவாரி(காங்கிரஸ்) 2504
* லட்சத்தீவு தொகுதியில முகமது சயீது(காங்கிரஸ்) 2647
* உ.பியின் ஹமிர்பூர் தொகுதியில்அஜேந்திர சிங் லோடி(சமாஜ்வாடி) 2629
* உ.பியின் பரூக்காபாத் தொகுதியில்முகேஷ் ராஜ்புத்(பாஜ) 2678
* உ.பியின் பன்ஸ்கான் தொகுதியில் கமலேஷ் படேல்(பாஜ) 3150
* பஞ்சாபின் பெரோஸ்பூர் தொகுதியில் ஷெர் சிங்(காங்கிரஸ்) 3242
* உ.பியின் சலீம்பூர் தொகுதியில் ராம்சங்கர் ராஜ்பார்(சமாஜ்வாடி) 3573
* மகாராஷ்டிராவின் துலே தொகுதியில் ஷோபா தினேஷ்(காங்கிரஸ்) 3831
* உ.பியின் புல்பூர் தொகுதியில் பிரவீண் படேல்(பாஜ) 4,332
* தமிழ்நாட்டில் விருதுநகர் தொகுதியில் மாணிக்க தாகூர்(காங்கிரஸ்) 4,379
* உ.பியின் தவுராகா தொகுதியில் ஆனந்த பதவுரியா(சமாஜ்வாடி) 4,449
* தெலங்கானாவின் மெகபூப்நபர் தொகுதியில் பாஜவின் டி.கே.அருணா 4,500 வாக்குகள்.
* மேற்கு வங்கத்தின் விஷ்ணுபூர் தொகுதியில் சவுமித்ரா கான்( பாஜ) 5567
* மேற்கு வங்கத்தின் ஆரம்பாக் தொகுதியில் மித்தாலி( திரிணாமுல்) 6399

The post பாஜவின் பி டீம் கட்சிகளின் கதி appeared first on Dinakaran.

Tags : BJP ,New Delhi ,Congress ,General Secretary ,Jairam Ramesh ,Biju Janata Dal ,Odisha ,YSR Congress ,Andhra Pradesh ,Parliament ,
× RELATED நீட் போலி விடைத்தாள் மாணவி வீடியோ...