×

2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுரை ஜூன் 6: மதுரையில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் சிக்கினார். மதுரை கீரைத்துறை எஸ்ஐ மணிமாறன் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். வில்லாபுரம் அகஸ்தியர் தெரு செல்லும் வழி அருகே சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்தனர். அவரிடம் சோதனை செய்தபோது 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். இதில், அவர் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த முருகன்(32) எனத்தெரிந்தது. அவரை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.

The post 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Keeraithura SI Manimaran ,Villapuram Agasthiyar Street ,Dinakaran ,
× RELATED மதுரை அருகே சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் போராட்டம்..!!