×

கட்டிட வேலையின்போது தவறி விழுந்த 2 பேர் பலி

மதுரை, ஜூன் 6: மதுரையில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த கொத்தனார், தொழிலாளி தவறி கீழே விழுந்து உயிரிழந்தனர். மதுரை செல்லூர் தியாகி பாலு 2வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(66). இவர் அயன் பாப்பாகுடியில் ஆரம்ப பள்ளி ஒன்றில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், விருதுநகர் காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்(40). இவர் மதுரை திருப்பாலையில் பள்ளி ஒன்றில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டிட வேலையின்போது தவறி விழுந்த 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madura ,Arumugam ,Thaiagi Balu 2nd Street ,Madurai Cellur ,Ayn Papapathik ,Dinakaran ,
× RELATED நாவல் பழம் பறிக்க மாடி மீது ஏறிய அரசு...