×

புகையிலை விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது

தொண்டாமுத்தூர்,ஜூன்6: கோவை பேரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாதம்பட்டி – சிறுவாணி சாலையில் பேக்கிரி ஒன்றின் அருகே உள்ள கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தகவல் வந்தது. போலீசார் அப்பகுதியில் சென்று பெட்டிக்கடையில் சோதனையிட்ட போது, அங்கு 1 கிலோ 700 கிராம் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளரான மணிபாலன்(23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து,கைதுசெய்ததோடு, அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post புகையிலை விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Boxer ,THONDAMUTHUR ,PERUR ,TOBACCO ,MATAMBATTI-SURVANI ROAD ,Dinakaran ,
× RELATED ‘எக்ஸ்கியூஸ் மீ… சாப்பிட என்ன...