×

காங்., கம்யூனிஸ்ட், பாஜ சார்பில் போட்டியிட்ட 9 பெண் வேட்பாளர்களும் தோல்வி: கேரள அரசியலில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசியல் கட்சிகள் சார்பில் 9 பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இந்த 9 பேருமே தோல்வியை தழுவி உள்ளனர். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஆனி ராஜா ,வடகரை தொகுதியில் போட்டியிட்ட ஷைலஜா, ஆலத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ரம்யா ஹரிதாஸ், எர்ணாகுளத்தில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஷைன், பாஜ கூட்டணி வேட்பாளர்களான ஷோபா சுரேந்திரன் (ஆலப்புழா), நிவேதிதா சுப்ரமணியன் (பொன்னானி), அஸ்வினி (காசர்கோடு), சங்கீதா விஸ்வநாதன் (இடுக்கி), சரசு (ஆலத்தூர்) ஆகிய பெண் வேட்பாளர்களும் தோல்வியை தழுவி இருக்கின்றனர்.

The post காங்., கம்யூனிஸ்ட், பாஜ சார்பில் போட்டியிட்ட 9 பெண் வேட்பாளர்களும் தோல்வி: கேரள அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Communist ,BJP ,Kerala ,Thiruvananthapuram ,Ani Raja ,Rahul Gandhi ,Wayanad ,Shailaja ,Vadakarai ,Aladhur ,
× RELATED அலுவலக தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்